இடுகைகள்

நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு

படம்
நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு

இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

படம்
இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

யானை புக்க புலம்

படம்
யானை புக்க புலம்

யாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் சூடு

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல

மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும்: மம்தா பானர்ஜி

மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும்: மம்தா பானர்ஜி

கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும்: விஜய்காந்த்

கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும்: விஜய்காந்த்

இலவச ஜியோஃபோன்: ரூ.1500 டிபாசிட், ரூ.153 மாதக்கட்டணம், வாட்ஸப் இல்லை

இலவச ஜியோஃபோன்: ரூ.1500 டிபாசிட், ரூ.153 மாதக்கட்டணம், வாட்ஸப் இல்லை ரூ.1500 டிபாசிட்டுடன் இலவசமாக ஜியோ ஃபோன்  என்ற அதிரடி அறிவிக்கை ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் மூகேஷ் அம்பானியால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதக்கட்டணமாக ரூ.153 செலுத்தினால் போன்கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ ஸ்மார்ட் போனில் ஜியோ அப்ளிகேஷன்களான ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவை முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும், பயன்பாட்டாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வாட்ஸப் வசதி தற்போது அந்த ஃபோனில் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் தினசரி 4G டேட்டா  500MB அளவுக்குமேல் கிடைக்காது.  இதர வசதிகளாவன :  நம்பர் கீபேடுகள், 2.4 இன்ச் டிஸ்பிளே, எஃப் எம் ரேடியோ, டார்ச் லைட்டு, ஹெட்ஃபோன் ஜேக், எஸ்டி கார்டு ஸ்லாட்டு, 4 வழி நேவிகேஷன் சிஸ்டம், தொலைபேசி எண் சேகரிப்புகள், தொலைபேசி பதிவுகள், ஜியோ செயலிகள் இடம்பெற்றிருக்கும். ரூ.309 மாதக்கட்டணத்தில் ஜியோ ஃபோன் கேபிள் டிவியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜியோ ஃபோன் கேபிள் டிவிடியை ...

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25-ந் தேதி பதவி ஏற்கிறார்

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25-ந் தேதி பதவி ஏற்கிறார்

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும்

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும்

துருக்கி-கிரீக்கில் 6.7 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டது

துருக்கி-கிரீக்கில் 6.7 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டது துருக்கிய கடற்பகுதியிலும், சில கிரேக்க தீவுகளிலும் 6.7 அளவு நிலநடுக்கமும் அதன் விளைவாக  ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரான மர்மைசை ஆழிப்பேரலை தாக்கியதால் வீடுகளும் கட்டிடங்களும் நீரில் மூழ்கின. கிரேக்கத் தீவான கோஸில் குறைந்தது 2 பேராவது இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு அதிகமான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த டி.ஐ.ஜி.ரூபா வேறு துறைக்கு மாற்றம்

மூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த டி.ஐ.ஜி.ரூபா வேறு துறைக்கு மாற்றம் திங்கள்கிழமையன்று கர்நாடக அரசு சிறைத்துறை டி.ஐ.ஜி.யான ரூபா டி மூட்கிலை வேறு துறைக்கு மாற்றியது. அண்மையில் அவர், அ.இ.அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா  ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததன் மூலம் பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் தனிச் சலுகைகள் பெற்றார் என்று கூறியிருந்தார்.

கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலிக்கு மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு

கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலிக்கு மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதற்காக பிஜேபி எம்.பி. ரூபா கங்குலி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “நான் இந்திய மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், திரிணாமுல் காங்கிரசை ஆதரிக்கும் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்…..  மம்தா பானர்ஜியின் விருந்தினராக அல்லாமல் உங்கள் மனைவிகளையும் மகள்களையும் மேற்கு வங்காளத்திற்கு அனுப்பிப் பாருங்கள்… அவர்கள் 15 நாட்களுக்கு மேல் கற்பழிக்கப்படாமல் அங்கேயே உயிர் பிழைத்திருந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள்…”, என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று குதற்கமாக பொது நிகழ்ச்சியில் ரூபா கங்குலி பேசியிருந்தார். இதற்கு திரிணமூல் காங்கிரஸ், ரூபா கங்குலி மேற்கு வங்காளத்தின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார் என்று பதிலளித்தது. இருப்பினும், நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரூபா, தனது கருத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார். எனவே தற்போது அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்

படம்
இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார் இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார். இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ.  விஷால் சிக்கா பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் சமீபத்திய செய்தி ஊடக சந்திப்பின்போது அதனை அறிமுகப்படுத்தினார். இவ்வாகனம் இன்ஃபோஸிஸின் மைசூர் வளாகத்தில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) போன்ற வளர்ந்து வரும்  தொழில்நுட்ப துறைகளில்  ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த மாதிரியான வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்சார் வரிசைகள் பொருத்தப்பட்ட, ஓட்டுநர் இல்லாத வண்டி, சுற்றியுள்ளவைகளை  தன்னியக்கமாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஒரு மனித ஓட்டுநரை நம்பியிருக்காமல் செயற்கை நுண்ணறிவினால் (AI) இயக்கப்படும் கணினியைப் பயன்படுத்துவதன் மூலம் அதனால் அவ்வாறு இயங்க முடிகிறது. இவ்வாகனமானது மேம்பட்ட கட்டுப்பாட்டு அம்சங்கள் பொருத்தப்பட்டு,  சாலை ...

காஷ்மீர் பிரச்னையில் சீனாவின் மத்தியஸ்தம் ஏற்க முடியாதது : இந்தியா

படம்
காஷ்மீர் பிரச்னையில் சீனாவின் மத்தியஸ்தம் ஏற்க முடியாதது : இந்தியா காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நாடான சீனாவின் மத்தியஸ்தத்தை ஏற்க முடியாது என்று இந்தியா நிராகரித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் சமீபத்தில் கூறியிருந்தார். இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, இதற்கு பதில் அளித்துப் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தை ஏற்க முடியாது என்றும், அது இருநாடுகள் இடையிலான பிரச்னை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் காஷ்மீர் விவகாரம் என்பது அந்த மாநில மக்கள் சம்பந்தப்பட்டது என்றும், இதில் எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாகவும் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இருநாடுகளின் பிரச்னை என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், அவர் தெரிவித்தார். மேலும், காஷ்மீரில் ரசாயன ஆயுதங்கள் எதையும் இந்தியா பயன்படுத்தவில்லை என்றும், இதுதொடர்பான பாகிஸ்தானின் புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், வெளியுறவு செய்த...

பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது

பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது

காபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வு

காபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வு காலையில் ஒரு கப் காபியுடன் உங்களது தினத்தைத் தொடங்குவது, உங்கள் வாழ்நாட்களை அதிகரிக்கச் செய்யும் என்று தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக (University of Southern California) ஆராய்ச்சியாளர்கள் தங்களது புதிய ஆய்வறிக்கையில் கூறுகிறார்கள். காபி குடிப்பதால் இதய நோய், புற்று நோய், பக்க வாதம், நீரிழிவு, சுவாசம் சம்பந்தமான நோய்கள், மற்றும் சிறுநீரக நோய்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அவர்களது ஆய்வறிக்கை கூறுகிறது. தினமும் ஒரு கப் காபி குடிப்பவர்கள் இறக்கும் வாய்ப்பு, காபியே குடிக்காதவர்களைவிட 12 % குறைவாக உள்ளதாகவும், தினமும் இரண்டு கப் காபி குடிப்பவர்களுக்கு இது 18 % குறைவென்றும் மேற்படி ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், இவ்விகிதங்கள் சாதாரண காபி குடிப்பவர்களுக்கும், கஃபீன் நீக்கப்பட்ட காபி (decoffeinated coffee) குடிப்பவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் இந்த ஆய்வுக்கட்டுரையின் பிரதான ஆராய்ச்சியாளர் வெரோனிக்கா செட்டியவான் (Veronica W. Setiawan). இவர் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலுள்ள (USC) கெக் மருத்துவக் கல்லூரியில் (Keck School of...

மாடுகள் விற்பனைத் தடை: சென்னை உயர்நீதி மன்றத்தின் இடைநிறுத்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது

மாடுகள் விற்பனைத் தடை: சென்னை உயர்நீதி மன்றத்தின் இடைநிறுத்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரரான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெறும். இத்தேர்தலில் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா எம்.பி.க்கள் வாக்களிப்பர். தற்போதைய குடியரசு துணைத் தலைவரான ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்டு 10-ம் தேதி நிறைவு பெறுகிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் சோனியா காந்தி பிற எதிர்கட்சித் தலைவர்களுடன்  ஆலோசித்த பிறகு இதனை அறிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா, மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் குலாம் நபி ஆசாத், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற...

அருணாச்சல பிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்

அருணாச்சல பிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்