இடுகைகள்

கூகுள் நிறுவனத்தின்மீது ஐரோப்பிய யூனியன் 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது

கூகுள் நிறுவனத்தின்மீது ஐரோப்பிய யூனியன் 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கையின்மை விதிகளை (Antitrust rules) மீறியதால், அபராதத்தொகையாக 2.42 பில்லியன் யூரோ செலுத்தியாக வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. தனது இணையத் தேடல் இயந்திரம் ( Search Engine) மூலம் கொடுக்கும் தேடல் முடிவுகளில், கூகிள் தனது சந்தை ஒப்பீட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளை 90 நாட்களுக்குள் அநுசரித்து, சேவைகளை மாற்றியமைக்காவிட்டால், கூகிளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் உலகளாவிய தின வருமானத்தில் 5% வரை அதிகமாக அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூகுளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மிகச் சமீபத்திய நிதி அறிக்கையின்படி, அதன் வருமானம் நாளொன்றுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதை முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்று கூகிள் நிறுவனம் கூறியுள்ளது.  

ஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய அளவில் இடையூறு

ஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய அளவில் இடையூறு ஐரோப்பா முழுவது, குறிப்பாக யுக்ரேனில், ‘பெட்யா’ (Petya) என்ற ரேன்சம்வேர் தாக்குதல் தரவு மையங்களிலுள்ள செர்வர்களின் மற்றும் தனிப்பட்ட கணினிகள் மீதும் நடத்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ‘வான்னக்ரை’ (Wanna Cry) என்ற ரேன்சம்வேர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை விடவும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யுக்ரேனில், தனியார் நிறுவன மற்றும் அரசாங்க அதிகாரிகள்  அங்குள்ள மின்கட்டமைப்புகள், வங்கிகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களில் கடுமையான ஊடுருவல்கள் இருந்ததாக அறிவித்தனர்.  மூத்த அதிகாரி ஒருவர், இருண்ட கணினி திரையின் புகைப்படத்தைக் காண்பித்து, “முழு நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை ” என்று பதிவு வெளியிட்டுள்ளார். கீவ் நகரிலுள்ள போரிஸ்ஸ்பில் விமான நிலையத்தில் ‘பெட்யா’  ரேன்சம்வேரினால் கணினிகள்  பாதிக்கப்பட்டதால் விமானங்கள் இயங்கவில்லை. ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் எண்ணெய் நிறுவனமும் டென்மார்க்கின் கப்பல் நிறுவனமான ஏ.பீ. மே...

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது திங்களன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர்  டிரம்ப் அறிவித்த, ஆறு பெரும்பான்மை முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத் தடை ஏற்படுத்தும் உத்தரவின் முக்கிய பாகங்களை மீண்டும் நிலைநிறுத்தி உள்ளது. இது குறித்தான முழு வாதங்களையும் இலையுதிர் காலத்திலிருந்து (அக்டோபர் மாதம்) கேட்கப்படும் என்றும் கூறியது. இது அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப் படுகிறது. முன்னதாக, டிரம்பின் இப்பயணத் தடை உத்தரவுகள் 9 வது சுற்று நீதிமன்றங்களினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தன. தீர்ப்பில், “ஒரு நற்பெயர் கொண்ட அமெரிக்கருடனோ அல்லது ஒரு அமெரிக்க  நிறுவனத்துடனோ சம்பத்தப்பட்ட நபர் ஒருவர் அகதி எனும் பெயரில் நாட்டுக்குள் நுழையும் போது  தடுக்கப்படுவதால் ஏற்படும்  கஷ்டங்களை சட்டபூர்வமாக  கூறுவதில் பிரச்சனையில்லை.” , என்று கூறப்பட்டிருந்தது. மேலும், “இந்த தனிநபர்களையும், நிறுவனங்களையும் பொறுத்தவரை, நாம் பயண உத்தரவுகளைத் தடை செய்ய இயலாது. ஆனால் அமெ...

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி இன்று (திங்கள்கிழமை) வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர்  மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கூடிய பேச்சுவார்த்தை மற்றும் பிரதிநிதித்துவ-நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தியபின், “பயங்கரவாதத்தை ஒழிப்பதே இரு நாடுகளுக்கும் அதி முக்கியமான முன்னுரிமையாகும்”, என்றார். பின்னர் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதமயமாக்கல் பற்றி நாங்கள் பேசினோம். இவ்விஷயத்தில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் ஒழிப்பு ஆகியவற்றில் எங்கள் ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும். இச்சந்திப்பின் முன்பாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதக் குழுவின் தலைவரான சையத் சலாஹூடினை ஒரு உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்க அரசுத்துறை அறிவித்த...

மானசரோவர் திருப்பயணிகளை அனுமதிப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு தொடர்கிறது : சீனா

மானசரோவர் திருப்பயணிகளை அனுமதிப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு தொடர்கிறது : சீனா திபெத்திலுள்ள கைலாச மானசரோவர் நோக்கி திருப்பயணம் சென்ற 47 பயணிகளை, சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் அருகே தடுத்து நிறுத்தியது  குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தையில் உள்ளதாக  சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெங் சூங்ஹாங் கூறுகையில், “எனக்குக் கிடைத்த தகவலின் படி, இரண்டு அரசாங்கங்களும் இந்த விடயத்தில் தொடர்பில் இருக்கின்றன”, என்றார். ஆனால், சீன-இந்திய எல்லையில் பயணிகள் சீன அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட, நிலச்சரிவுகள் மற்றும் மழை போன்ற வானிலை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இருந்ததா என்பது குறித்து விளக்க மறுத்து விட்டார். இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே கருத்து தெரிவிக்கையில், ‘‘நாது லா வழியாக இந்திய ஆன்மிக பயணிகள் செல்வதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. இது பற்றி சீனாவிடம் மத்திய அரசு எடுத்துச்செல்லும்’’ என்று குறிப்பிட்டார். மழையினாலும், நிலச்சரிவுகளாலும் சாலைகள் மிகவும் பழுது அடைந்து இருப்பதால்தான...

நீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு

படம்
நீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு

விசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டது

விசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டது