இடுகைகள்

அக்டோபர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கறுப்புப் பணமும் ஸ்விஸ் பேங்கும்

குமுதத்திலிருந்து :- இ ந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள். உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் `சுவிஸ் பேங்க்' என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. எனவே, அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் தங்களின் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான முக்கிய காரணம். இந்த ரகசிய காப்பு விவகாரங்களை 1934 ஆம் ஆண்டு முதலே ஒரு சட்டமாக்கி பாதுகாத்து வருகிறது சுவிஸ் அரசு. மேலும், அந்த நாட்டின் சட்டப்படி அதிகப்படியான வருமானத்தை கணக்கில் காட்டாமலிருப்பதோ, சொத்துக்கள் மற்றும் முதலீடுக

ரொம்ப முக்கியம் - மடோன்னாவின் விவாகரத்து !

படம்
பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பேர்போன அமெரிக்கப் பாடகி மடோன்னா, ஹாலிவுட் தரப்படி கொஞ்சம் நீண்ட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தனது கணவரான கய் ரிட்சியை இன்று விவாகரத்து செய்துள்ளார். ஜீவனாம்சமாக மடோன்னா 60 மில்லியன் டாலர்களை கய்க்கு கொடுக்கச் சம்மதித்துள்ளார். மடோன்னாவின் மூன்று குழந்தைகளுள் இருவர் கய்க்குப் பிறந்தவர்கள். இவர்களது பிரிவுக்கு முக்கியமான காரணங்களாக சொல்லப்படுபவை : மடோன்னாவை விட கய் வயதில் இளையவர். மடோன்னாவை பல முறை 'கிழவி' என்று அழைத்து இம்சைப்படுத்தியிருக்கிறாராம். மடோன்னா சார்ந்துள்ள யூத மந்திரவாதக் கோட்பாடான 'கப்பாலா'வில் கய்க்கு அதிக ஈடுபாடு இல்லை. அலெக்ஸ் ரோட்ரிகஸ் என்ற பேஸ்பால் விளையாட்டு வீரரை கப்பாலாவில் மடோன்னா ஈடுபடுத்தியதால் அவரது மனைவி அவரை முன்பு விவாகரத்து செய்திருந்தார். இந்த விவகாரத்தால் கய்க்கு மடோன்னாவின்மேல் கோபம். விரைவில் மடோன்னாவின் அடுத்த திருமணச் செய்திகளை எதிர்பாருங்கள்.