இடுகைகள்

டிசம்பர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களைப் பாதுகாக்க என்ன செய்கிறார்கள் ?

மும்பாய் தீவிரவாத தாக்குதலுக்குப் பின் வழக்கம் போல இந்திய அரசு தனது பணிகளைச் செவ்வனே செய்யத் தொடங்கியிருக்கிறது. வழக்கம் போலவே அண்டை நாட்டின் மேல் பழி போட்டுவிட்டு, ஆற அமர புலன் விசாரித்து, நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்குள் மக்கள் இந்த நிகழ்ச்சியை மறந்து விடுவார்கள். அடுத்த தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மீண்டும் ஆட்சியில். வழக்கம் போல ஊழல், கறுப்புப் பணச் சேமிப்பு, சுவிஸ் பேங்க் அக்கவுண்ட், இத்யாதி, இத்யாதி. இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் - இந்த தீவிரவாத தாக்குதல் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு மாதத்திற்கு முன்னரே அமெரிக்க உளவு அமைப்பு இது போன்ற கடல் வழியான ஒரு தாக்குதல் மும்பாயில் நடக்கக் கூடும் என்று இந்திய அதிகாரிகளை எச்சரித்திருக்கிறது. அதன் பின்னர் இந்திய அதிகாரிகளே இதுபோன்ற ஒரு செய்தியை ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள். மும்பாயின் பிரபல ஹோட்டல்களுக்கும் பாதுகாப்பு சிறிது நாள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து செயல்படுத்தாமல் விட்டுவிட்டதால் இறுதியில் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நாட்டு மக்களின் பாதுகாப்பை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எந்த