ரொம்ப முக்கியம் - மடோன்னாவின் விவாகரத்து !
பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பேர்போன அமெரிக்கப் பாடகி மடோன்னா, ஹாலிவுட் தரப்படி கொஞ்சம் நீண்ட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தனது கணவரான கய் ரிட்சியை இன்று விவாகரத்து செய்துள்ளார். ஜீவனாம்சமாக மடோன்னா 60 மில்லியன் டாலர்களை கய்க்கு கொடுக்கச் சம்மதித்துள்ளார்.மடோன்னாவின் மூன்று குழந்தைகளுள் இருவர் கய்க்குப் பிறந்தவர்கள். இவர்களது பிரிவுக்கு முக்கியமான காரணங்களாக சொல்லப்படுபவை :
  • மடோன்னாவை விட கய் வயதில் இளையவர். மடோன்னாவை பல முறை 'கிழவி' என்று அழைத்து இம்சைப்படுத்தியிருக்கிறாராம்.  • மடோன்னா சார்ந்துள்ள யூத மந்திரவாதக் கோட்பாடான 'கப்பாலா'வில் கய்க்கு அதிக ஈடுபாடு இல்லை.  • அலெக்ஸ் ரோட்ரிகஸ் என்ற பேஸ்பால் விளையாட்டு வீரரை கப்பாலாவில் மடோன்னா ஈடுபடுத்தியதால் அவரது மனைவி அவரை முன்பு விவாகரத்து செய்திருந்தார். இந்த விவகாரத்தால் கய்க்கு மடோன்னாவின்மேல் கோபம்.

  விரைவில் மடோன்னாவின் அடுத்த திருமணச் செய்திகளை எதிர்பாருங்கள்.

  கருத்துகள்

  இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

  செவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்

  மாட்டுக்கறி கொண்டுசென்றதாக கொல்லப்பட்ட ஜூனைத் கான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

  ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை