ஆறு மாதத்திற்கு எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை

ஆறு மாதத்திற்கு உலகில் உள்ள எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள் ! எந்த உயிர், யார் பிச்சை கொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்களா ? அதாங்க, பெரும் ஹாட்ரான் மோதி என்ற துகள் நொறுக்கியைத்தான் சொல்கிறேன். ஏதோ மைக்ரோ கருந்துகள் வெளியே வந்து எல்லோரையும் சாப்பிட்டுவிடும் என்று படங்காட்டினார்களே - அதுதான். ரொம்ப சக்ஸஸ்புல்லாக முதற்கட்ட சோதனைகளைச் செய்து முடித்துவிட்டதாக கூடச் சொன்னார்கள். சோதனை முடிந்தபின் ஒரு மின்மாற்றி எரிந்து விட்டதாக செய்தி வந்தது. பிறகு, கருவியின் உள்ளே பெரிய அளவில் வயரிங் டேமேஜ் ஆகிவிட்டபடியாலும், நவம்பர், டிசம்பரில் குளிர்காலத்திற்காக மூடுவதாலும், அனேகமாக அடுத்த ஆண்டு, மார்ச் அல்லது ஏப்ரலில் மீண்டும் சோதனைகள் துவங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஏதோ அதுவரைக்கும் கருந்துகளைப் பற்றி (கவலைப் படுவதாக இருந்தால்) கவலையை ஒத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்

மாட்டுக்கறி கொண்டுசென்றதாக கொல்லப்பட்ட ஜூனைத் கான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை