அறிவுகெட்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் எதிர்காலம்?

பெற்றோர்கள் பொதுவாகவே குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்று பல தியாகங்களையும் செய்து வளர்ப்பார்கள் என்பதுதான் உலக நியதி. ஆனால் இதற்கு விதிவிலக்காக பலர் இருக்கிறார்கள் என்பதை சமீபத்திலே நான் வாசித்த செய்திகள் நிரூபிக்கின்றன.

1.கோவை
விபத்தில் மூளை செயலிழந்த இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை பத்திரிக்கைகள் பெரிதாக எழுதியதுபோல், தாமும் தமது மூளை வளர்ச்சி குறைவான ஆனால் நன்றாக நடமாடிக் கொண்டிருக்கின்ற மகனின் உறுப்புகளையும் தானம் செய்தால் புகழ் பெறுவோம் என்று ஒரு பெற்றோர் கருதினர். கலெக்டர் அலுவலகம் சென்று இதைச் சொன்னபின்னர் பலராலும் அறிவுறுத்தப்பட்டபின் தங்களது தவறை உணர்ந்து கொண்டார்கள் என்று தோன்றுகிறது. இவர்களுக்கு தாம் பெற்ற மகன் துறுதுறுவென ஓடியாடி இருக்கும் காலத்திலேயே உறுப்புத்தானம் செய்தால் இறந்து விடுவான் என்பது தோன்றவில்லையா ? அல்லது மூளை வளர்ச்சி இல்லாத மகனின் தொல்லை தீர்வதுடன் புகழும் கிடைக்கும் என்று நினைத்ததால் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்களா ?

http://dinamalar.com/fpnnews.asp?News_id=2243&cls=row3

2.செயின்ட் ஜான், அரிசோனா (USA)
எட்டு வயது மகனுக்கு துப்பாக்கியால் சுட கற்றுக்கொடுத்தார் தந்தை. சிறுவனுக்கு எட்டும் இடத்தில் துப்பாக்கியை வைத்திருக்கிறார். விளைவு - பையன் தந்தையாரையும் இன்னொரு நபரையும் சுட்டுக் கொன்று விட்டான். "இளங்கன்று பயமறியாது" ( விவரமும் அறியாது ) என்பது அந்த அறிவில்லாத தந்தைக்குப் புரியவில்லை. இதில் இன்னொரு கொடுமை - அந்த ஊர்ப் போலீசார் எட்டு வயது சிறுவன் திட்டமிட்டு தன் தந்தையையும் இன்னொரு நபரையும் கொலைசெய்தான் என்று வழக்கு பதிவு செய்கிறார்களாம்.

http://news.bbc.co.uk/2/hi/americas/7721244.stm

கருத்துகள்

  1. பெற்ற குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொல்வது குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவது போன்ற படுபாதக செயல்களை செய்யும் பெற்றோரும் உண்டு. பெற்ற பிள்ளைகளை, முக்கியமாக பெண் பிள்ளைகளை, மாடலிங், விபச்சாரம், சினிமா என்ற சாக்கடைகளுக்குள் தள்ளி காசு பார்க்கும் பெற்றோரும் உண்டு. இதெல்லாம் விதிவிலக்குகள் என்றாலும். இப்படிப்பட்ட பெற்றோர் அதிகரித்துவருவது கவலையளிக்கும் விஷயம்.

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள் ராபின் ! கருத்துகளுக்கு நன்றி.

    //இப்படிப்பட்ட பெற்றோர் அதிகரித்துவருவது கவலையளிக்கும் விஷயம்.//

    இந்த காலத்தி்ன் பொருள்முதல்வாதமே (materialism) இது போன்ற செயல்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ரொம்ப முக்கியம் - மடோன்னாவின் விவாகரத்து !

அமெரிக்காவில் டிரம்பின் பயணத்தடை அமலுக்கு வருகிறது