கடவுளின் கண்



மின்னஞ்சலில் வந்த செய்தி :

அன்புடையீர்,

நீங்கள் இங்கே காண்பது காண்பதற்கு மிகவும் அரிய ஒரு புகைப்படம். 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் ஹபிள் டெலஸ்கோப்பில் படம் பிடித்து "கடவுளின் கண்" என பெயரிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இதுவரை பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளது. கண்களை ஒரு நிமிடம் மூடி, உங்கள் விருப்பத்தை மனத்தில் நினைத்து விட்டு இந்த படத்தைப் பாருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். இந்த படத்தை நீங்கள் மட்டுமே வைத்திராமல், உடனே ஏழு பேருக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இப்படிக்கு,

#$@^&%*

விசாரித்த உண்மை :

இது ஹெலிக்ஸ் நெபுலாவின் புகைப்படம். நாசா வலைத்தளத்தில் 2003 -ல் வெளியிட்டிருக்கிறார்கள். இது பல ஃபோட்டோக்களில் இருந்து ஒன்றிக்கப்பட்டது. இதில் இருக்கும் நிறங்கள் அந்த நெபுலாவின் இயற்கையான நிறங்களல்ல. மேலும் 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது என்பது தவறு. எப்போதும் இதை காணமுடியும்.

NASA Picture of the Day

டிஸ்க்ளெய்மர் : இதை முன்பே நீங்கள் படித்திருந்தால், மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

கருத்துகள்

  1. கடவுள் ஒற்றைக் கண்ணனா ? என்று நினைத்தேன். நல்லவேளை டிஸ்கி போட்டுவிட்டீர்கள்.
    :)

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி கோவி.கண்ணன் அவர்களே !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவுகெட்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் எதிர்காலம்?

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல