இடுகைகள்

ஜூலை, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு

படம்
நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு

இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

படம்
இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

யானை புக்க புலம்

படம்
யானை புக்க புலம்

யாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் சூடு

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல

மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும்: மம்தா பானர்ஜி

மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும்: மம்தா பானர்ஜி

கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும்: விஜய்காந்த்

கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும்: விஜய்காந்த்

இலவச ஜியோஃபோன்: ரூ.1500 டிபாசிட், ரூ.153 மாதக்கட்டணம், வாட்ஸப் இல்லை

இலவச ஜியோஃபோன்: ரூ.1500 டிபாசிட், ரூ.153 மாதக்கட்டணம், வாட்ஸப் இல்லை ரூ.1500 டிபாசிட்டுடன் இலவசமாக ஜியோ ஃபோன்  என்ற அதிரடி அறிவிக்கை ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் மூகேஷ் அம்பானியால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதக்கட்டணமாக ரூ.153 செலுத்தினால் போன்கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ ஸ்மார்ட் போனில் ஜியோ அப்ளிகேஷன்களான ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவை முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும், பயன்பாட்டாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வாட்ஸப் வசதி தற்போது அந்த ஃபோனில் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் தினசரி 4G டேட்டா  500MB அளவுக்குமேல் கிடைக்காது.  இதர வசதிகளாவன :  நம்பர் கீபேடுகள், 2.4 இன்ச் டிஸ்பிளே, எஃப் எம் ரேடியோ, டார்ச் லைட்டு, ஹெட்ஃபோன் ஜேக், எஸ்டி கார்டு ஸ்லாட்டு, 4 வழி நேவிகேஷன் சிஸ்டம், தொலைபேசி எண் சேகரிப்புகள், தொலைபேசி பதிவுகள், ஜியோ செயலிகள் இடம்பெற்றிருக்கும். ரூ.309 மாதக்கட்டணத்தில் ஜியோ ஃபோன் கேபிள் டிவியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜியோ ஃபோன் கேபிள் டிவிடியை ...

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25-ந் தேதி பதவி ஏற்கிறார்

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25-ந் தேதி பதவி ஏற்கிறார்

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும்

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும்

துருக்கி-கிரீக்கில் 6.7 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டது

துருக்கி-கிரீக்கில் 6.7 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டது துருக்கிய கடற்பகுதியிலும், சில கிரேக்க தீவுகளிலும் 6.7 அளவு நிலநடுக்கமும் அதன் விளைவாக  ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரான மர்மைசை ஆழிப்பேரலை தாக்கியதால் வீடுகளும் கட்டிடங்களும் நீரில் மூழ்கின. கிரேக்கத் தீவான கோஸில் குறைந்தது 2 பேராவது இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு அதிகமான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த டி.ஐ.ஜி.ரூபா வேறு துறைக்கு மாற்றம்

மூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த டி.ஐ.ஜி.ரூபா வேறு துறைக்கு மாற்றம் திங்கள்கிழமையன்று கர்நாடக அரசு சிறைத்துறை டி.ஐ.ஜி.யான ரூபா டி மூட்கிலை வேறு துறைக்கு மாற்றியது. அண்மையில் அவர், அ.இ.அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா  ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததன் மூலம் பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் தனிச் சலுகைகள் பெற்றார் என்று கூறியிருந்தார்.

கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலிக்கு மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு

கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலிக்கு மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதற்காக பிஜேபி எம்.பி. ரூபா கங்குலி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “நான் இந்திய மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், திரிணாமுல் காங்கிரசை ஆதரிக்கும் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்…..  மம்தா பானர்ஜியின் விருந்தினராக அல்லாமல் உங்கள் மனைவிகளையும் மகள்களையும் மேற்கு வங்காளத்திற்கு அனுப்பிப் பாருங்கள்… அவர்கள் 15 நாட்களுக்கு மேல் கற்பழிக்கப்படாமல் அங்கேயே உயிர் பிழைத்திருந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள்…”, என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று குதற்கமாக பொது நிகழ்ச்சியில் ரூபா கங்குலி பேசியிருந்தார். இதற்கு திரிணமூல் காங்கிரஸ், ரூபா கங்குலி மேற்கு வங்காளத்தின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார் என்று பதிலளித்தது. இருப்பினும், நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரூபா, தனது கருத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார். எனவே தற்போது அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்

படம்
இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார் இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார். இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ.  விஷால் சிக்கா பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் சமீபத்திய செய்தி ஊடக சந்திப்பின்போது அதனை அறிமுகப்படுத்தினார். இவ்வாகனம் இன்ஃபோஸிஸின் மைசூர் வளாகத்தில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) போன்ற வளர்ந்து வரும்  தொழில்நுட்ப துறைகளில்  ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த மாதிரியான வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்சார் வரிசைகள் பொருத்தப்பட்ட, ஓட்டுநர் இல்லாத வண்டி, சுற்றியுள்ளவைகளை  தன்னியக்கமாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஒரு மனித ஓட்டுநரை நம்பியிருக்காமல் செயற்கை நுண்ணறிவினால் (AI) இயக்கப்படும் கணினியைப் பயன்படுத்துவதன் மூலம் அதனால் அவ்வாறு இயங்க முடிகிறது. இவ்வாகனமானது மேம்பட்ட கட்டுப்பாட்டு அம்சங்கள் பொருத்தப்பட்டு,  சாலை ...

காஷ்மீர் பிரச்னையில் சீனாவின் மத்தியஸ்தம் ஏற்க முடியாதது : இந்தியா

படம்
காஷ்மீர் பிரச்னையில் சீனாவின் மத்தியஸ்தம் ஏற்க முடியாதது : இந்தியா காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நாடான சீனாவின் மத்தியஸ்தத்தை ஏற்க முடியாது என்று இந்தியா நிராகரித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் சமீபத்தில் கூறியிருந்தார். இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, இதற்கு பதில் அளித்துப் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தை ஏற்க முடியாது என்றும், அது இருநாடுகள் இடையிலான பிரச்னை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் காஷ்மீர் விவகாரம் என்பது அந்த மாநில மக்கள் சம்பந்தப்பட்டது என்றும், இதில் எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாகவும் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இருநாடுகளின் பிரச்னை என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், அவர் தெரிவித்தார். மேலும், காஷ்மீரில் ரசாயன ஆயுதங்கள் எதையும் இந்தியா பயன்படுத்தவில்லை என்றும், இதுதொடர்பான பாகிஸ்தானின் புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், வெளியுறவு செய்த...

பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது

பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது

காபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வு

காபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வு காலையில் ஒரு கப் காபியுடன் உங்களது தினத்தைத் தொடங்குவது, உங்கள் வாழ்நாட்களை அதிகரிக்கச் செய்யும் என்று தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக (University of Southern California) ஆராய்ச்சியாளர்கள் தங்களது புதிய ஆய்வறிக்கையில் கூறுகிறார்கள். காபி குடிப்பதால் இதய நோய், புற்று நோய், பக்க வாதம், நீரிழிவு, சுவாசம் சம்பந்தமான நோய்கள், மற்றும் சிறுநீரக நோய்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அவர்களது ஆய்வறிக்கை கூறுகிறது. தினமும் ஒரு கப் காபி குடிப்பவர்கள் இறக்கும் வாய்ப்பு, காபியே குடிக்காதவர்களைவிட 12 % குறைவாக உள்ளதாகவும், தினமும் இரண்டு கப் காபி குடிப்பவர்களுக்கு இது 18 % குறைவென்றும் மேற்படி ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், இவ்விகிதங்கள் சாதாரண காபி குடிப்பவர்களுக்கும், கஃபீன் நீக்கப்பட்ட காபி (decoffeinated coffee) குடிப்பவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் இந்த ஆய்வுக்கட்டுரையின் பிரதான ஆராய்ச்சியாளர் வெரோனிக்கா செட்டியவான் (Veronica W. Setiawan). இவர் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலுள்ள (USC) கெக் மருத்துவக் கல்லூரியில் (Keck School of...

மாடுகள் விற்பனைத் தடை: சென்னை உயர்நீதி மன்றத்தின் இடைநிறுத்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது

மாடுகள் விற்பனைத் தடை: சென்னை உயர்நீதி மன்றத்தின் இடைநிறுத்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரரான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெறும். இத்தேர்தலில் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா எம்.பி.க்கள் வாக்களிப்பர். தற்போதைய குடியரசு துணைத் தலைவரான ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்டு 10-ம் தேதி நிறைவு பெறுகிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் சோனியா காந்தி பிற எதிர்கட்சித் தலைவர்களுடன்  ஆலோசித்த பிறகு இதனை அறிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா, மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் குலாம் நபி ஆசாத், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற...

அருணாச்சல பிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்

அருணாச்சல பிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்

மாட்டுக்கறி கொண்டுசென்றதாக கொல்லப்பட்ட ஜூனைத் கான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மாட்டுக்கறி கொண்டுசென்றதாக கொல்லப்பட்ட ஜூனைத் கான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது மாட்டுக்கறி கொண்டுசென்றதாக ஜூனைத் கான் என்ற சிறுவன், டெல்லியில் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து பிரதமரிடம் மோடி வேண்டுகோள்

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து பிரதமரிடம் மோடி வேண்டுகோள் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டபோது, இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி, விஜய் மல்லையாவை நாடு கடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். அதன்படி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூ ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்தார். முன்னதாக அவர் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மாநாட்டின் நிறைவு நாளான நேற்று மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அதன்படி தென் கொரியா அதிபர் மூன் ஜே-இன்னை சந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு ஒத்துழைப்பை பலப்பட...

புதுவையின் அடாவடி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டம்

புதுவையின் அடாவடி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டம் புதுவையின் அடாவடி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் இன்று நடைபெற்றதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் மகன் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் மகன் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகனும் பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது,  டெண்டர் விட 3 ஏக்கர் நிலம் பெற்றதாக ஊழல் புகாரை முன்வைத்து மொத்தம் 5 வழக்குகளை சிபிஐ  இன்று பதிவு செய்துள்ளது.

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

படம்
தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, மீனவர் பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காணும் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பாரம்பரியமாக பாக்ஜலசந்தியில் மீன்பிடித்துவந்த தமிழக மீனவர்களை இலங்கையின் புதிய சட்டம் வெகுவாக பாதிக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மீனவர் எல்லை தாண்டுவதாக கூறப்படும் பிரச்சனைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம் என்று கூறியுள்ள முதலமைச்சர், மாறாக அபராதம், சிறை தண்டனை போன்ற வாழ்வாதாரத்தையே வெகுவாக பாதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற இலங்கையை அ...

ஜி-20 : டிரம்ப் – புடின் முதல்முறையாக சந்திப்பு

ஜி-20 : டிரம்ப் – புடின் முதல்முறையாக சந்திப்பு வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக சந்தித்தனர் – இரு நாடுகளுக்கு இடையிலான பல்வெறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். வெளியுறவு விவகாரங்களில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரம் வரை, பல விஷயங்களைப் பற்றியும் இரு தலைவர்களும் கலந்துரையாடினார்கள். அவர்களின் உரையாடல் திட்டமிடப்பட்ட 35 நிமிட நேரத்தைவிட கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் நீட்டப்பட்டது. “ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும், மற்றும் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை நாங்கள் நன்முறையில் எதிர்நோக்குகிறோம்,” என்று டிரம்ப் புட்டினுடனான அவரது சந்திப்பில் தெரிவித்தார். புடின் கூறும்போது: “உக்ரேன், சிரியா, சில இருதரப்பு பிரச்சினைகள் முதலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது”, என்றார்.

ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சிறப்பு ஜெ.இ.இ. (JEE ADVANCED) நுழைவுத்தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு எழுதியவர்களுக்கு 2 கேள்விகள் தவறாக இருந்த காரணத்தினால், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கியதற்க்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம், விஷ்ணு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கில் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் கீழ் நீதிமன்றங்கள் ஐஐடி நுழைவுத்தேர்வு, கலந்தாய்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். வழக்கில் குளறுபடிகள் இருப்பதாக கூறி, விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக திரையரங்குகள் இன்று திறப்பு; போராட்டம் வாபஸ்

தமிழக திரையரங்குகள் இன்று திறப்பு; போராட்டம் வாபஸ் கடந்த 4 நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழக திரையரங்கு உரிமையாளர்கள், போராட்டத்தை வாபஸ் பெற்று, திரையரங்குகளை இன்று முதல் திறப்பதற்கு ஒப்புதல் அளித்தனர். கேளிக்கை வரி பிரச்னை தொடர்பாக பேச 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளதையடுத்து,   4 நாட்களாக நீடித்த திரையரங்கு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. திரைத்துறை மீதும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேளிக்கை வரி 30 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் மூடப்பட்டன. அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோருடன் திரையுலகினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கேளிக்கை வரி பிரச்னை தொடர்பாக பேசி முடிவு எடுக்க 12 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்தது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மீண்டும் வழக்கு

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மீண்டும் வழக்கு தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமீறல் நடந்ததாக கூறி, ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. காளைகள் காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், ஜல்லிக்கட்டில் மிருகவதை இருப்பதாகவும் கூறி பீட்டா, தமிழர்களின் வீரவீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெறாதவாறு உச்சநீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைப்பெறவில்லை. தமிழக இளைஞர்களால், இந்த போட்டி நடத்தப்பட வேண்டும், தமிழ் கலாச்சாரம் காக்க வேண்டும் என அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம், மதுரையின் தமுக்கம், சென்னையில் மெரினா என தமிழகம் முழுவதும் பரவி உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு  வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழக சட்டசபையில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.  தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்ட...

ஜி-20 மாநாடு: போலீசாருடன் ஆர்பாட்டக்காரர்கள் மோதல்

ஜி-20 மாநாடு: போலீசாருடன் ஆர்பாட்டக்காரர்கள் மோதல் ஜெர்மனியின் G20 உச்சிமாநாடு நடக்கவிருக்கும் ஹம்பர்க் நகரில் ஆர்பாட்டக்காரர்களுடன் நடந்த மோதல்களில் எழுபத்தாறு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். மூன்று பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். ஆர்பாட்டக்காரர்களில் சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மோதல்கள் 12,000 ஆர்பாட்டக்காரர்கள் கலந்து கொண்ட ” நரகத்திற்கு வரவேற்பு”  என்ற அணிவகுப்பினை  பொலிஸார் தடுத்தபோது  தொடங்கியது.

இந்தியா ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம்மை பிரிப்போம்: சீன அரசு மீடியா

இந்தியா ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம்மை பிரிப்போம்: சீன அரசு மீடியா இந்தியா- பூடான் – சீனாவின் முச்சந்திப்பான டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்கிறது. பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறியபோது , இந்திய ராணுவம் அதனை தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து உள்ள சீனா அடாவடியான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்தியா தன்னுடைய படையை திரும்ப அழைக்க வேண்டும் என கூறி வருகிறது. இந்தியா, அமைதியான பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் படைகளை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது.

கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் சினிமா டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரியும், தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதித்து இருப்பது தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேளிக்கை வரியை ரத்து செய்து திரையுலகை காப்பாற்ற நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பட உலகினர் பலர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பதிவிட்டனர். ரஜினிகாந்த் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அடுத்த வாரம் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டு உள்ளார். இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கேளிக்கை வரி குறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ரஜினிகாந்த் கருத்து பதிவிட்டு உள்ளார். டுவிட்டரில், “தமிழ் திரையுலகில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு உள்ளார்.

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்டு: மும்பை கோர்ட்டு உத்தரவு

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்டு: மும்பை கோர்ட்டு உத்தரவு தொழில் அதிபர் விஜய் மல்லையா 17 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக்கொண்டு லண்டனில் குடியேறிவிட்டார். இதில், ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.750 கோடிக்கும் மேற்பட்ட கடனும் அடங்கும்.

வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனா எதுவும் செய்வதாகத் தெரியவில்லை : டிரம்ப்

வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனா எதுவும் செய்வதாகத் தெரியவில்லை : டிரம்ப் வடகொரியா ஏற்படுத்தும் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்ப்பதில் சீனாவுக்குள்ள அக்கறை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் சீனா-வட கொரியா இடையிலான வணிகம் 40 சதவீதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப் சீனாவுடன் பேசுவதில் பயனில்லை என்றும் ஆனாலும் முயன்று பார்ப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்புக் குழு விதித்த தடையை மீறி நடத்தப்பட்டதாகும். பாதுகாப்புக் குழுவை அவசரமாகக் கூட்டி இப்பிரச்சினையை விவாதிக்கவேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. நிக்கி ஹேலியின் அறிவிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதுவர், நிக்கி ஹேலி, புதன்கிழமையன்று, ஐ.நா.வின் சிறப்பு பாதுகாப்புக் கூட்டத்தில் கூறுகையில், “வட கொரியாவை வழிக்குக் கொண்டுவர  அமெரிக்காவிற்கு  கணிசமான இராணுவத் தீர்வுகள் உள்ளன” என்று எச்சரித்துள்ளார். மேலும், “அமெரிக்கா மோதல் போக்கை விரும்பவில்லை, ஆனால், தேவைப்பட்டால் ர...

இந்தியா, இஸ்ரேல் இடையே விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம் உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா, இஸ்ரேல் இடையே விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம் உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து மூன்று நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுடனான 7 புரிந்தணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த இவ்வேழு ஒப்பந்தங்களில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கடுமையாக பாதிக்கப்படும்: நடிகர் விஷால்

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கடுமையாக பாதிக்கப்படும்: நடிகர் விஷால் ஜி.எஸ்.டி. வரியால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறினார். நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி) முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. சினிமா துறைக்கு ரூ.28 சதவீத வரி விதிக்கப்பட்டு ஒட்டு மொத்த திரைப்படத்துறையினர் எதிர்ப்பால் 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவீத வரி என்றும் அதற்கும் அதிகமான தொகையை வசூலிக்கும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரி என்றும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. இதையும் திரையுலகினர் ஏற்காமல் பிராந்திய மொழி படங்களுக்கு சரக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடைசி முயற்சியாக மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில் நடிகர் கமல்ஹாசனும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களின் தயாரிப்பாளர்களும் கையெழுத்திட்டு உள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சென்னையில் உள்ள திரைப்பட தணிக்கை துறை அதிக...

ஜி.எஸ்.டி.யின் தாக்கம் : ஹோட்டல் உணவுப் பொருள்கள் மற்றும் சினிமா கட்டணங்கள் விலை உயர்ந்தன

ஜி.எஸ்.டி.யின் தாக்கம் : ஹோட்டல் உணவுப் பொருள்கள் மற்றும் சினிமா கட்டணங்கள் விலை உயர்ந்தன புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி.யினால் ஹோட்டல்களில் விற்பனையாகும் உணவுப்புருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. குளிர்சாதன வசதியுடைய ஹோட்டல்களில் 18% சேவை வரியும் இல்லாத ஹொட்டல்களில் 12 % சேவை வரியும் விதிக்கப்படுவதால், இட்லி உள்ளிட்ட அனைத்து விதமான உணவுப்பண்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ரூ. 5 -க்கு விற்கப்பட்ட இட்லி தற்போது ரூ. 22 வரை விற்கப்படும் என்று தெரிய வருகிறது. இதுபோல, தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுகின்றது. ரூ. 100-க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், ரூ.100 -க்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது. தியேட்டர் கட்டணங்கள் மீது விதிக்கப்படும் வரியும் பொதுமக்களை பாதிப்பதோடு அல்லாமல் சினிமா துறையையும் பாதிக்கும்.  ஏனென்றால் தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்களின் விலையும் உயருகிறது. வெளியில் இருந்து கொ...

பண்டைய வரைபடத்தைக் காண்பித்து இந்தியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடும் சீனா

பண்டைய வரைபடத்தைக் காண்பித்து இந்தியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடும் சீனா எல்லையில் இந்தியா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள சீனா 127 ஆண்டுகளுக்கு முந்தைய மேப்பை வெளியிட்டு இந்தியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாட முயல்கிறது. இந்திய, திபெத், பூட்டான் முச்சந்திப்பிலுள்ள 269 சதுர கி.மீ பரப்பளவிலான ஒரு நிலப்பரப்பு சீனாவினால் தனது என்று உரிமை கொண்டாடப்படுகிறது. இவ்விடத்தில் சாலைத் கட்டுமானம் தொடர்பாக சீன மற்றும் இந்தியத் துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. சீனா அடாவடியாக இங்கு புதிதாக ராணுவச் சாலையை உருவாக்க முயலுவதால்,  புது டெல்லிக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2013-ல் தாவ்லத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) -இல் இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடியைப் போல இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு சீனாவின் சாலை அமைக்கும் பணியையும் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்தியா தனது 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளது.

இன்று கனடாவின் 150-வது பிறந்ததினம்

இன்று கனடாவின் 150-வது பிறந்ததினம் இன்று (ஜூலை 1) கனடாவின் 150-வது பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் ஆட்டவா-வில் இதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுமார் 500,000 பார்வையாளர்கள் பார்லிமென்ட் ஹில்லில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.  கனேடிய அரசு இக்கொண்டாட்டங்களுக்காக அரை-பில்லியன் கனேடிய டாலர்களை செலவிட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய மேப்பிள் லீஃப் கொடி கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் மலர்ந்துள்ளது. 38 மில்லியன் மக்கள் உலகின் இரண்டாவது பெரிய நாட்டின் பெருமையை காட்டுகின்றனர். ஆயினும் எல்லோரும் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை.  கனடாவின் சில சுதேசிய மக்கள் காலனியாதிக்கம் மற்றும் அடக்குமுறை முதலிய காரணங்களால் தாம் கனடா தினத்தைக்  கொண்டாடப்போவதில்லை என்கின்றனர். அவர்கள் ஜூலை 1, 1867 இல் கனடாவை உருவாக்கும் ஆவணங்களை ஐரோப்பியரும் கான்ஃபெடேஷனின் தந்தையரும் ஒப்பிடுவதன் முன்னரே ஆயிரமாயிரம் ஆண்டுகள் “கனடா”வில் வசித்து வந்திருக்கிறோம் என்று கூறுகின்றனர். தமது எதிர்ப்பைக்...

செவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்

செவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும் அமெரிக்காவில் அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவர் நடத்தும் ரேடியோ நிகழ்ச்சியில் குழந்தைகளைக் கடத்திச் சென்று செவ்வாய் கிரகத்தில்  அடிமைக் குடியிருப்பில் வைத்திருப்பதாக ஒரு புதிய சதி கோட்பாட்டை (Conspiracy Theory) வெளியிட்டனர். இது யாராலும் நம்பமுடியாததாக இருந்தாலும்,  நாசா அதற்கு அமைதியாக,  அப்படி எந்த அடிமைக் குடியிருப்பும் செவ்வாயில் இல்லை என மறுத்திருக்கிறது. வியாழனன்று (ஜூன் 29) அலெக்ஸ் ஜோன்ஸின் ரேடியோ நிகழ்ச்சியில், ராபர்ட் டேவிட் ஸ்டீல் என்பவர் கூறியதாவது : செவ்வாய் கிரகத்தில் ஒரு காலனி உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.  கடந்த 20 வருடங்களாக பூமியிலிருந்து கடத்தப்பட்டு, செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட குழந்தைகளால் அக்காலனி நிரப்பப் பட்டுள்ளது. செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்தபின்,  அந்த காலனியில் அடிமைகளாக இருப்பதைத் தவிர அவர்களுக்கு வெறு வழியில்லை. இதனைப் பற்றி அலெக்ஸ் ஜோன்ஸ் கருத்துக் கூறுகையில், நாசாவின்  90 சதவிகித பயணங்கள் இரகசியமானவை என்று எனக்குத் தெரியும். உயர் மட்ட நாசா பெ...