ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடைஇந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு நடத்த
உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு
சிறப்பு ஜெ.இ.இ. (JEE ADVANCED) நுழைவுத்தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள்
எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு எழுதியவர்களுக்கு 2
கேள்விகள் தவறாக இருந்த காரணத்தினால், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.கருணை மதிப்பெண் வழங்கியதற்க்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம்,
விஷ்ணு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கில் தொடர்ந்தனர். இந்த வழக்கை
விசாரித்த உச்சநீதிமன்றம் ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு
நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் கீழ் நீதிமன்றங்கள் ஐஐடி
நுழைவுத்தேர்வு, கலந்தாய்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என்றும்
நீதிபதிகள் கூறியுள்ளனர். வழக்கில் குளறுபடிகள் இருப்பதாக கூறி, விசாரணையை
திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்