பண்டைய வரைபடத்தைக் காண்பித்து இந்தியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடும் சீனா

பண்டைய வரைபடத்தைக் காண்பித்து இந்தியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடும் சீனா



எல்லையில் இந்தியா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள
சீனா 127 ஆண்டுகளுக்கு முந்தைய மேப்பை வெளியிட்டு இந்தியப் பகுதிக்குச்
சொந்தம் கொண்டாட முயல்கிறது.



இந்திய, திபெத், பூட்டான் முச்சந்திப்பிலுள்ள 269 சதுர கி.மீ பரப்பளவிலான
ஒரு நிலப்பரப்பு சீனாவினால் தனது என்று உரிமை கொண்டாடப்படுகிறது.
இவ்விடத்தில் சாலைத் கட்டுமானம் தொடர்பாக சீன மற்றும் இந்தியத்
துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. சீனா அடாவடியாக
இங்கு புதிதாக ராணுவச் சாலையை உருவாக்க முயலுவதால்,  புது டெல்லிக்கும்,
பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2013-ல் தாவ்லத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) -இல் இருநாடுகளுக்கிடையே
ஏற்பட்ட நெருக்கடியைப் போல இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.



தற்போது அங்கு சீனாவின் சாலை அமைக்கும் பணியையும் தடுத்து நிறுத்தி உள்ளது.
இந்தியா தனது 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அங்கு பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தி உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவுகெட்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் எதிர்காலம்?

கடவுளின் கண்

இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களைப் பாதுகாக்க என்ன செய்கிறார்கள் ?