இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்
இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்
இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்.
இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் சமீபத்திய செய்தி ஊடக சந்திப்பின்போது அதனை அறிமுகப்படுத்தினார். இவ்வாகனம் இன்ஃபோஸிஸின் மைசூர் வளாகத்தில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகளில் ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த மாதிரியான வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்சார் வரிசைகள் பொருத்தப்பட்ட, ஓட்டுநர் இல்லாத வண்டி, சுற்றியுள்ளவைகளை தன்னியக்கமாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஒரு மனித ஓட்டுநரை நம்பியிருக்காமல் செயற்கை நுண்ணறிவினால் (AI) இயக்கப்படும் கணினியைப் பயன்படுத்துவதன் மூலம் அதனால் அவ்வாறு இயங்க முடிகிறது. இவ்வாகனமானது மேம்பட்ட கட்டுப்பாட்டு அம்சங்கள் பொருத்தப்பட்டு, சாலை அடையாளங்கள், போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் தடைகளை அடையாளம் கண்டுகொள்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக