ஜி.எஸ்.டி.யின் தாக்கம் : ஹோட்டல் உணவுப் பொருள்கள் மற்றும் சினிமா கட்டணங்கள் விலை உயர்ந்தன

புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி.யினால் ஹோட்டல்களில்
விற்பனையாகும் உணவுப்புருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. குளிர்சாதன
வசதியுடைய ஹோட்டல்களில் 18% சேவை வரியும் இல்லாத ஹொட்டல்களில் 12 % சேவை
வரியும் விதிக்கப்படுவதால், இட்லி உள்ளிட்ட அனைத்து விதமான
உணவுப்பண்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ரூ. 5 -க்கு விற்கப்பட்ட
இட்லி தற்போது ரூ. 22 வரை விற்கப்படும் என்று தெரிய வருகிறது.
இதுபோல, தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி
விதிக்கப்படுகின்றது. ரூ. 100-க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும்
தியேட்டர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், ரூ.100 -க்கு அதிகமாக
டிக்கெட் விற்பனை செய்யும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியும்
வசூலிக்கப்படுகிறது. தியேட்டர் கட்டணங்கள் மீது விதிக்கப்படும் வரியும்
பொதுமக்களை பாதிப்பதோடு அல்லாமல் சினிமா துறையையும் பாதிக்கும். ஏனென்றால்
தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்களின் விலையும் உயருகிறது.
வெளியில் இருந்து கொண்டு வரும் பொருள்களுக்கு தியேட்டர்களில்
அனுமதியில்லாததால், இது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை வெகுவாக
பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவையெல்லாம் திருட்டு விசிடி அதிகரிக்கவும் ஆன்லைனில் படம் பார்ப்பதை அதிகரிக்கவுமே வழி வகுக்கிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக