குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரரான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெறும். இத்தேர்தலில் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா எம்.பி.க்கள் வாக்களிப்பர். தற்போதைய குடியரசு துணைத் தலைவரான ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்டு 10-ம் தேதி நிறைவு பெறுகிறது.
காங்கிரஸ் துணைத் தலைவர் சோனியா காந்தி பிற எதிர்கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு இதனை அறிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா, மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் குலாம் நபி ஆசாத், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ணன் காந்தியை, குடியரசு துணை தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனினும் அவர் கோபால கிருஷ்ணன் காந்திக்கு வாழ்த்துதல் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக