இடுகைகள்

2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களைப் பாதுகாக்க என்ன செய்கிறார்கள் ?

மும்பாய் தீவிரவாத தாக்குதலுக்குப் பின் வழக்கம் போல இந்திய அரசு தனது பணிகளைச் செவ்வனே செய்யத் தொடங்கியிருக்கிறது. வழக்கம் போலவே அண்டை நாட்டின் மேல் பழி போட்டுவிட்டு, ஆற அமர புலன் விசாரித்து, நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்குள் மக்கள் இந்த நிகழ்ச்சியை மறந்து விடுவார்கள். அடுத்த தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மீண்டும் ஆட்சியில். வழக்கம் போல ஊழல், கறுப்புப் பணச் சேமிப்பு, சுவிஸ் பேங்க் அக்கவுண்ட், இத்யாதி, இத்யாதி. இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் - இந்த தீவிரவாத தாக்குதல் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு மாதத்திற்கு முன்னரே அமெரிக்க உளவு அமைப்பு இது போன்ற கடல் வழியான ஒரு தாக்குதல் மும்பாயில் நடக்கக் கூடும் என்று இந்திய அதிகாரிகளை எச்சரித்திருக்கிறது. அதன் பின்னர் இந்திய அதிகாரிகளே இதுபோன்ற ஒரு செய்தியை ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள். மும்பாயின் பிரபல ஹோட்டல்களுக்கும் பாதுகாப்பு சிறிது நாள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து செயல்படுத்தாமல் விட்டுவிட்டதால் இறுதியில் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நாட்டு மக்களின் பாதுகாப்பை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எந்த...

அறிவுகெட்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் எதிர்காலம்?

பெற்றோர்கள் பொதுவாகவே குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்று பல தியாகங்களையும் செய்து வளர்ப்பார்கள் என்பதுதான் உலக நியதி. ஆனால் இதற்கு விதிவிலக்காக பலர் இருக்கிறார்கள் என்பதை சமீபத்திலே நான் வாசித்த செய்திகள் நிரூபிக்கின்றன. 1.கோவை விபத்தில் மூளை செயலிழந்த இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை பத்திரிக்கைகள் பெரிதாக எழுதியதுபோல், தாமும் தமது மூளை வளர்ச்சி குறைவான ஆனால் நன்றாக நடமாடிக் கொண்டிருக்கின்ற மகனின் உறுப்புகளையும் தானம் செய்தால் புகழ் பெறுவோம் என்று ஒரு பெற்றோர் கருதினர். கலெக்டர் அலுவலகம் சென்று இதைச் சொன்னபின்னர் பலராலும் அறிவுறுத்தப்பட்டபின் தங்களது தவறை உணர்ந்து கொண்டார்கள் என்று தோன்றுகிறது. இவர்களுக்கு தாம் பெற்ற மகன் துறுதுறுவென ஓடியாடி இருக்கும் காலத்திலேயே உறுப்புத்தானம் செய்தால் இறந்து விடுவான் என்பது தோன்றவில்லையா ? அல்லது மூளை வளர்ச்சி இல்லாத மகனின் தொல்லை தீர்வதுடன் புகழும் கிடைக்கும் என்று நினைத்ததால் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்களா ? http://dinamalar.com/fpnnews.asp?News_id=2243&cls=row3 2.செயின்ட் ஜான், அரிசோனா (USA) எட்டு வயது மகனு...

கடவுளின் கண்

படம்
மின்னஞ்சலில் வந்த செய்தி : அன்புடையீர், நீங்கள் இங்கே காண்பது காண்பதற்கு மிகவும் அரிய ஒரு புகைப்படம். 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் ஹபிள் டெலஸ்கோப்பில் படம் பிடித்து "கடவுளின் கண்" என பெயரிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இதுவரை பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளது. கண்களை ஒரு நிமிடம் மூடி, உங்கள் விருப்பத்தை மனத்தில் நினைத்து விட்டு இந்த படத்தைப் பாருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். இந்த படத்தை நீங்கள் மட்டுமே வைத்திராமல், உடனே ஏழு பேருக்கு மின்னஞ்சல் செய்யவும். இப்படிக்கு, #$@^&%* விசாரித்த உண்மை : இது ஹெலிக்ஸ் நெபுலாவின் புகைப்படம். நாசா வலைத்தளத்தில் 2003 -ல் வெளியிட்டிருக்கிறார்கள். இது பல ஃபோட்டோக்களில் இருந்து ஒன்றிக்கப்பட்டது. இதில் இருக்கும் நிறங்கள் அந்த நெபுலாவின் இயற்கையான நிறங்களல்ல. மேலும் 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது என்பது தவறு. எப்போதும் இதை காணமுடியும். NASA Picture of the Day டிஸ்க்ளெய்மர் : இதை முன்பே நீங்கள் படித்திருந்தால், மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

21-ம் நூற்றாண்டிலும் காட்டுமிராண்டிகள் வாழ்கிறார்கள்

21-ம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகள் எங்கே வாழ்கிறார்கள் என்கிறீர்களா? இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொடுங்கோலாட்சி செய்துவரும் சோமாலியாவின் ஒரு பகுதியில்தான். 13 வயதான ஒரு சிறுமியை மூன்றுபேர் கெடுத்துவிட்டார்கள். அவரது தந்தையாரும் குடும்பத்தாரும் அதைக்குறித்து ஷரியத் கோர்ட்டில் புகார் கொடுக்கச் சென்ற நேரத்தில், சிறுமிக்கு விபச்சாரி என்ற பட்டம் கட்டி சிறையில் வைத்தனர். பிறகு அவள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டனர். கிஸ்மயோ என்ற இடத்தில் நடந்த இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இப்படி கூறுகிறார் : ஏறத்தாழ 1000 பேர் அந்த இடத்தில் குழுமினர். இரண்டு மணி நேரம் கழித்து இஸ்லாமிய அதிகாரிகள் அப்பெண்ணை அங்கே கொண்டுவந்தனர். அப்பெண் அழுகையுடன் கேட்டாள் : "என்ன வேண்டும் உங்களுக்கு ?" "அல்லா எங்களுக்கு கூறியபடி நாங்கள் உனக்குச் செய்யப்போகிறோம்" "ஐயோ நான் போகமாட்டேன். என்னை விட்டுவிடுங்கள். என்னை விட்டுவிடுங்கள்." படுபாதகர்கள் அவளை ஆள் அளவு உள்ள ஒரு குழிக்குள் நிறுத்தி, கழுத்து வரை மண்ணால் மூடினர். பின்னர் 50 பேர் கற்களை அவள் தலையில் எறிந்து கொன்றனர். ம...

கறுப்புப் பணமும் ஸ்விஸ் பேங்கும்

குமுதத்திலிருந்து :- இ ந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள். உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் `சுவிஸ் பேங்க்' என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. எனவே, அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் தங்களின் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான முக்கிய காரணம். இந்த ரகசிய காப்பு விவகாரங்களை 1934 ஆம் ஆண்டு முதலே ஒரு சட்டமாக்கி பாதுகாத்து வருகிறது சுவிஸ் அரசு. மேலும், அந்த நாட்டின் சட்டப்படி அதிகப்படியான வருமானத்தை கணக்கில் காட்டாமலிருப்பதோ, சொத்துக்கள் மற்றும் முதலீடுக...

ரொம்ப முக்கியம் - மடோன்னாவின் விவாகரத்து !

படம்
பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பேர்போன அமெரிக்கப் பாடகி மடோன்னா, ஹாலிவுட் தரப்படி கொஞ்சம் நீண்ட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தனது கணவரான கய் ரிட்சியை இன்று விவாகரத்து செய்துள்ளார். ஜீவனாம்சமாக மடோன்னா 60 மில்லியன் டாலர்களை கய்க்கு கொடுக்கச் சம்மதித்துள்ளார். மடோன்னாவின் மூன்று குழந்தைகளுள் இருவர் கய்க்குப் பிறந்தவர்கள். இவர்களது பிரிவுக்கு முக்கியமான காரணங்களாக சொல்லப்படுபவை : மடோன்னாவை விட கய் வயதில் இளையவர். மடோன்னாவை பல முறை 'கிழவி' என்று அழைத்து இம்சைப்படுத்தியிருக்கிறாராம். மடோன்னா சார்ந்துள்ள யூத மந்திரவாதக் கோட்பாடான 'கப்பாலா'வில் கய்க்கு அதிக ஈடுபாடு இல்லை. அலெக்ஸ் ரோட்ரிகஸ் என்ற பேஸ்பால் விளையாட்டு வீரரை கப்பாலாவில் மடோன்னா ஈடுபடுத்தியதால் அவரது மனைவி அவரை முன்பு விவாகரத்து செய்திருந்தார். இந்த விவகாரத்தால் கய்க்கு மடோன்னாவின்மேல் கோபம். விரைவில் மடோன்னாவின் அடுத்த திருமணச் செய்திகளை எதிர்பாருங்கள்.

ஆறு மாதத்திற்கு எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை

படம்
ஆறு மாதத்திற்கு உலகில் உள்ள எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள் ! எந்த உயிர், யார் பிச்சை கொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்களா ? அதாங்க, பெரும் ஹாட்ரான் மோதி என்ற துகள் நொறுக்கியைத்தான் சொல்கிறேன். ஏதோ மைக்ரோ கருந்துகள் வெளியே வந்து எல்லோரையும் சாப்பிட்டுவிடும் என்று படங்காட்டினார்களே - அதுதான். ரொம்ப சக்ஸஸ்புல்லாக முதற்கட்ட சோதனைகளைச் செய்து முடித்துவிட்டதாக கூடச் சொன்னார்கள். சோதனை முடிந்தபின் ஒரு மின்மாற்றி எரிந்து விட்டதாக செய்தி வந்தது. பிறகு, கருவியின் உள்ளே பெரிய அளவில் வயரிங் டேமேஜ் ஆகிவிட்டபடியாலும், நவம்பர், டிசம்பரில் குளிர்காலத்திற்காக மூடுவதாலும், அனேகமாக அடுத்த ஆண்டு, மார்ச் அல்லது ஏப்ரலில் மீண்டும் சோதனைகள் துவங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஏதோ அதுவரைக்கும் கருந்துகளைப் பற்றி (கவலைப் படுவதாக இருந்தால்) கவலையை ஒத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

என்னைப் பற்றி

நான்தான் திருத்தொண்டன். தென்தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். கணிப்பொறித்துறையில் வேலை.