இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் டிரம்பின் பயணத்தடை அமலுக்கு வருகிறது

படம்
அமெரிக்காவில் டிரம்பின் பயணத்தடை அமலுக்கு வருகிறது அமெரிக்க அதிபர் டிரம்பின் நிறைவேற்று அதிகாரத்தில் வெளியிடப்பட்ட பயணத்தடையில், உச்ச நீதிமன்றம் அனுமதித்த பகுதிகள் இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது. பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற 6 நாடுகளின் பிரஜைகளுக்கும், அகதிகளுக்கும் புதிய விசா வரையறை பின்பற்றப்படும். இந்த நாடுகளை சேர்ந்தோரும், அகதிகளும் இனிமேல் அமெரிக்கா விசா பெறுவதற்கு, அமெரிக்காவோடு நெருங்கிய குடும்ப அல்லது வர்த்தகத் தொடர்புகள் கொண்டவராக இருக்க வேண்டும் என்று இந்த புதிய வரையறை வலியுறுத்துகிறது. இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாட்டு மக்களை பாதிக்கின்ற இந்த விதிமுறைகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவின் ஒரு பகுதியை உச்ச நீதிமன்றம் அனுமதித்த பின்னர், இந்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள்படி, நெருங்கிய உறவுமுறையுடைய பெற்றோர், மனைவி, குழந்தை, மருமகன் அல்லது மருமகள், அல்லது அவர்களின் குழந்தைகள் ஆகியோரை தவிர இந்த ஆறு நாடுகளை சேர்ந்த ஏனையோர் அடுத்து வரும் 90 ந...

ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர்

ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வது தவறு என்று பிரதமர் மோடி கூறிய சில மணி நேரங்களில், ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள், மாட்டுக்கறி வைத்திருந்தார் என ஒரு முஸ்லிமை கொடுமையாகத் தாக்கிக் கொன்றுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில்  42 வயது ஆன அலிமுத்தீன் இல்யாஸ் அஸ்கர் அலி என்பவர் பசு பாதுகாப்பு தீவிரவாதிகளால் தாக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாருதி வேன் ஒன்றில் அஸ்கர் உட்பட மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். அப்போது அதில் மாட்டுக்கறி கொண்டு செல்வதாக சிலர் வதந்தி பரப்பியதையடுத்து,  வேனை தாக்கிய பசு பாதுகாப்பு தீவிரவாத கும்பல், வேனை தீயிட்டு கொளுத்தியது. அதில் அஸ்கர் படுகாயம்டைந்தார்.  அவரை காப்பாற்ற அவருடன் இருந்த இருவரும் முயன்றபோது  முடியவில்லை. இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் மிதந்த அஸ்கரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அஸ்கர் பரிதாபமா...

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. : வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு; பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பு என்கிறார் ஸ்டாலின்

படம்
தமிழகத்தில் ஜி.எஸ்.டி. : வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு; பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பு என்கிறார் ஸ்டாலின் தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாளை மாநிலம் முழுவதும் கடையடைப்பில் ஈடுபடுகிறார்கள். மேலும், தமிழகத்தில் அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஒரே நாடு ஒரே வரி” என்று வம்படியாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அவசர அவசரமாக மத்திய அரசு கொண்டு வருவது ஒருபுறமிருக்க, அதை விட வேகமாக அ.தி.மு.க. அரசு இந்த சட்டத்திற்கு சட்டமன்ற ஒப்புதலைப் பெற்று, வருகின்ற ஜூலை 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. தமிழகம் ஏற்கனவே வறட்சியில் வாடிக்கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிவிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே வங்கி சேவைக...

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கமுடியாது : மோடி

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கமுடியாது : மோடி பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குஜராத்தில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திஜியின் குருவான ஷ்ர்மத் ராஜ் சந்திராஜி அவர்களின் 150-வது பிறந்த தினத்தில் கலந்து கொண்டு பேசும் போது,  பசுப் பாதுகாவலர்களுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் வன்முறையைப் பின்பற்றுவது மகாத்மாவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றார். நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பவர்கள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு செல்பவர்களை, பசுக் காவலர்கள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன்சிங், பீகாரில் பொது இடத்தில்  சிறுநீர் கழித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக இருப்பவர் ராதா மோகன்சிங். சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பதை யாரோ ஒரு மர்ம நபர் மறைந்து இருந்து படம் பிடித்தார். அந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிலும் அந்த காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அமைச்சர் ராதாமோகன், பிபாரா அருகிலுள்ள நெடுஞ்சாலை -28 இல் நீண்ட தூரத்திற்கு கழிப்பிடன் எதுவும் இருக்கவில்லை, என்று தனது செய்கையை நியாயப்படுத்தியுள்ளார்.

வத்திக்கான் கார்டினல்மீது பல்வேறு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள்

வத்திக்கான் கார்டினல்மீது பல்வேறு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த  மூத்த கத்தோலிக்க கார்டினல் மீது பலவேறு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண போலிசார் வியாழனன்று தெரிவித்துள்ளனர். போப் பிரான்சிஸின் தலைமை நிதி ஆலோசகரான கார்டினல் ஜார்ஜ் பெல், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டகளுக்கு இப்போது ஆளாகியுள்ளார். இவர் போப்பிற்குப் பின்னால் வத்திக்கானில் மூன்றாவது மிக சக்தி வாய்ந்த நபராவார். இதுவரை கத்தோலிக்க திருச்சபையில் இவ்வளவு உயர்ந்த தரவரிசையில் உள்ள வத்திக்கான் அதிகாரி பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டகளுக்கு ஆளானதில்லை. விக்டோரியா மாநில பொலிஸ் துணை ஆணையாளர் ஷேன் பட்டன், கார்டினல் பெல்லுக்கு எதிரான  புகார்களைக் குறித்த மேலதிக விவரங்கள்  எதனையும் விவரிக்கவில்லை. பெல் 10 சிறுவர்களை தவறாக பயன்படுத்தியதாக முன்னதாக கூறப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தற்போது 20 வயதிலிருந்து 20 வயதிலிருந்து 50 வயதிற்குள் இருக்கிறார்கள். பெல், இவை தவறான குற்றச்சாட்டுகள் என்று மீண்டும் மீண்டும் மறுத்துள்ளார். அவர் ஜூலை 18 ம் தேத...

கூகுள் நிறுவனத்தின்மீது ஐரோப்பிய யூனியன் 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது

கூகுள் நிறுவனத்தின்மீது ஐரோப்பிய யூனியன் 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கையின்மை விதிகளை (Antitrust rules) மீறியதால், அபராதத்தொகையாக 2.42 பில்லியன் யூரோ செலுத்தியாக வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. தனது இணையத் தேடல் இயந்திரம் ( Search Engine) மூலம் கொடுக்கும் தேடல் முடிவுகளில், கூகிள் தனது சந்தை ஒப்பீட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளை 90 நாட்களுக்குள் அநுசரித்து, சேவைகளை மாற்றியமைக்காவிட்டால், கூகிளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் உலகளாவிய தின வருமானத்தில் 5% வரை அதிகமாக அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூகுளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மிகச் சமீபத்திய நிதி அறிக்கையின்படி, அதன் வருமானம் நாளொன்றுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதை முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்று கூகிள் நிறுவனம் கூறியுள்ளது.  

ஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய அளவில் இடையூறு

ஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய அளவில் இடையூறு ஐரோப்பா முழுவது, குறிப்பாக யுக்ரேனில், ‘பெட்யா’ (Petya) என்ற ரேன்சம்வேர் தாக்குதல் தரவு மையங்களிலுள்ள செர்வர்களின் மற்றும் தனிப்பட்ட கணினிகள் மீதும் நடத்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ‘வான்னக்ரை’ (Wanna Cry) என்ற ரேன்சம்வேர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை விடவும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யுக்ரேனில், தனியார் நிறுவன மற்றும் அரசாங்க அதிகாரிகள்  அங்குள்ள மின்கட்டமைப்புகள், வங்கிகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களில் கடுமையான ஊடுருவல்கள் இருந்ததாக அறிவித்தனர்.  மூத்த அதிகாரி ஒருவர், இருண்ட கணினி திரையின் புகைப்படத்தைக் காண்பித்து, “முழு நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை ” என்று பதிவு வெளியிட்டுள்ளார். கீவ் நகரிலுள்ள போரிஸ்ஸ்பில் விமான நிலையத்தில் ‘பெட்யா’  ரேன்சம்வேரினால் கணினிகள்  பாதிக்கப்பட்டதால் விமானங்கள் இயங்கவில்லை. ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் எண்ணெய் நிறுவனமும் டென்மார்க்கின் கப்பல் நிறுவனமான ஏ.பீ. மே...

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது திங்களன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர்  டிரம்ப் அறிவித்த, ஆறு பெரும்பான்மை முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத் தடை ஏற்படுத்தும் உத்தரவின் முக்கிய பாகங்களை மீண்டும் நிலைநிறுத்தி உள்ளது. இது குறித்தான முழு வாதங்களையும் இலையுதிர் காலத்திலிருந்து (அக்டோபர் மாதம்) கேட்கப்படும் என்றும் கூறியது. இது அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப் படுகிறது. முன்னதாக, டிரம்பின் இப்பயணத் தடை உத்தரவுகள் 9 வது சுற்று நீதிமன்றங்களினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தன. தீர்ப்பில், “ஒரு நற்பெயர் கொண்ட அமெரிக்கருடனோ அல்லது ஒரு அமெரிக்க  நிறுவனத்துடனோ சம்பத்தப்பட்ட நபர் ஒருவர் அகதி எனும் பெயரில் நாட்டுக்குள் நுழையும் போது  தடுக்கப்படுவதால் ஏற்படும்  கஷ்டங்களை சட்டபூர்வமாக  கூறுவதில் பிரச்சனையில்லை.” , என்று கூறப்பட்டிருந்தது. மேலும், “இந்த தனிநபர்களையும், நிறுவனங்களையும் பொறுத்தவரை, நாம் பயண உத்தரவுகளைத் தடை செய்ய இயலாது. ஆனால் அமெ...

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி இன்று (திங்கள்கிழமை) வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர்  மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கூடிய பேச்சுவார்த்தை மற்றும் பிரதிநிதித்துவ-நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தியபின், “பயங்கரவாதத்தை ஒழிப்பதே இரு நாடுகளுக்கும் அதி முக்கியமான முன்னுரிமையாகும்”, என்றார். பின்னர் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதமயமாக்கல் பற்றி நாங்கள் பேசினோம். இவ்விஷயத்தில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் ஒழிப்பு ஆகியவற்றில் எங்கள் ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும். இச்சந்திப்பின் முன்பாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதக் குழுவின் தலைவரான சையத் சலாஹூடினை ஒரு உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்க அரசுத்துறை அறிவித்த...

மானசரோவர் திருப்பயணிகளை அனுமதிப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு தொடர்கிறது : சீனா

மானசரோவர் திருப்பயணிகளை அனுமதிப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு தொடர்கிறது : சீனா திபெத்திலுள்ள கைலாச மானசரோவர் நோக்கி திருப்பயணம் சென்ற 47 பயணிகளை, சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் அருகே தடுத்து நிறுத்தியது  குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தையில் உள்ளதாக  சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெங் சூங்ஹாங் கூறுகையில், “எனக்குக் கிடைத்த தகவலின் படி, இரண்டு அரசாங்கங்களும் இந்த விடயத்தில் தொடர்பில் இருக்கின்றன”, என்றார். ஆனால், சீன-இந்திய எல்லையில் பயணிகள் சீன அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட, நிலச்சரிவுகள் மற்றும் மழை போன்ற வானிலை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இருந்ததா என்பது குறித்து விளக்க மறுத்து விட்டார். இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே கருத்து தெரிவிக்கையில், ‘‘நாது லா வழியாக இந்திய ஆன்மிக பயணிகள் செல்வதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. இது பற்றி சீனாவிடம் மத்திய அரசு எடுத்துச்செல்லும்’’ என்று குறிப்பிட்டார். மழையினாலும், நிலச்சரிவுகளாலும் சாலைகள் மிகவும் பழுது அடைந்து இருப்பதால்தான...

நீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு

படம்
நீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு

விசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டது

விசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டது

பூமியை விண்கல் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது : வானியல் ஆய்வாளர்

பூமியை விண்கல் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது : வானியல் ஆய்வாளர்

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்

போர்ச்சுக்கல் காட்டுத் தீ : தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்

போர்ச்சுக்கல் காட்டுத் தீ : தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம் மத்திய போர்ச்சுகல் கோயம்பிராவிற்கு அருகில் காட்டுத்தீயானது கடுமையாக பரவியதால் 61 பேர் இதுவரை இறந்துள்ளனர்; மேலும் பலர்  காயமடைந்துள்ளனர். “இந்த காட்டுத்தீ  சமீபத்திய ஆண்டுகளின் மிகப்பெரிய சோகமான நிகழ்வாகும் ” என அதிகாரிகள் விவரித்துள்ளனர். இக்காட்டுத்தீ மின்னலால் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  இந்த காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க முயலுகையில் பலர் அவர்களது காரிலேயே இறந்துள்ளனர்.

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம் நீரிழிவு நோய் நமக்கு இருப்பதாகத் தெரிந்தால், சில வாழ்வுமுறை மாற்றங்களை மேற்கொள்வதுடன் அவ்வப்போது டாக்டரைக் கலந்தாலோசித்து செயல்பட்டால், இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். • நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் உணவு அவர்களின் இரத்த சர்க்கரை அளவைப் பாதிப்பதால் இது மிகவும் முக்கியம். • கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவு என்று எதுவும் இல்லையென்றாலும், உங்கள் உடலின் தேவைக்கு ஏற்ப சரியான அளவு உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். • காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை உணவில் நிறைய சேருங்கள். கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் மெலிதான இறைச்சிகளைத் தேர்வு செய்யவும். • உங்கள் மருத்துவரை வருடத்திற்கு இரு முறையாவது பார்க்கவும். • நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாகையால் கொலஸ்டிரால், இரத்த அழுத்தம் மற்றும் மூன்று மாதத்தைய சராசரி இரத்த சர்க்கரை ( A1c ) அளவுகளை அறிந்து வைத்திருக்கவும். • வருடத்திற்கொருமுறை முழு கண் சோதனை செய்வது அவசியம். • பாதத்திற்கான மருத்துவரிடம் சென்று பாதங்களில் புண் அல்லது ...

நலம் தரும் மூலிகைகள் : 2

நலம் தரும் மூலிகைகள் : 2 ஆறுமணிப்பூ எண்ணெய் மற்றும் ஃபிவர்ஃபியூ ஆகியவற்றின் மருத்துவ பயன்களைப் பற்றி பார்க்கலாம். 3) ஆறுமணிப்பூ எண்ணெய் (Evening Primrose Oil) ஆறுமணிப்பூ என்பது மாலையில் மலரும் மலைப்பூ வகையைச் சார்ந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் காம்மா லினெலோனிக் அமிலத்தைக் (Gamma Linelonic Acid) கொண்டுள்ளது. இவ்வமிலம் ஒமேகா-6 கொழுப்பின் ஒரு வகையாகும். இதனால் மூட்டுக்களில் ஏற்படும் விறைப்பினை குறைக்க இயலும். மேலும் இதனால் மூளையின் ஆற்றல் மற்றும் ஒருமித்த கவனம் ஆகியவற்றை அதிகரிக்கவும் முடியும் என் கருதப்படுகிறது. 4) ஃபிவர்ஃபியூ (Feverfew) ஃபிவர்ஃபியூ (Feverfew) என்பது ஐரோப்பாவில் வளரும் சிறிய பூ வகையாகும். இதன் பூக்களும் இலைகளும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. இச்செடியின் புதிய இலைகளை எடுத்து உண்பதால் ஒற்றைத் தலைவலியை குறைக்க முடியும்.    

சென்னை செங்குன்றத்தில் ரூ.71 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னை செங்குன்றத்தில் ரூ.71 கோடி போதைப்பொருள் பறிமுதல் சென்னை செங்குன்றத்தில் அதிரடி சோதனையின் போது ரூ.71 கோடி போதைப்பொருள்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அமெரிக்க போர்கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதல் : 7 மாலுமிகளை காணவில்லை

அமெரிக்க போர்கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதல் : 7 மாலுமிகளை காணவில்லை ஜப்பானை அடுத்த கடற்பகுதியில் அமெரிக்க போர்கப்பலான யூ.எஸ்.ஏஸ். பிட்ஸ்ஜெரால்ட்  அதைவிட 4 மடங்கு பெரிய சரக்குக் கப்பலுடன் மோதிய விபத்தில் 7 மாலுமிகளை காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் ஜப்பானிய கடற்காவல் படையும் வெறு அமெரிக்க மற்றும் ஜப்பானிய கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.

கறுப்பு பணம்: இந்தியாவுடன் தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய சுவிட்சர்லாந்து ஒப்புதல்

கறுப்பு பணம்: இந்தியாவுடன் தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய சுவிட்சர்லாந்து ஒப்புதல் இந்தியாவுடன் கறுப்புப் பணம் குறித்த தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது. 2018-ல் இத்தானியங்கிப் பகிர்வு செயலாற்றத் துவங்கும். இருப்பினும் கறுப்புப் பணம் பற்றிய விவரங்கள் முதலாவதாக 2019 வாக்கிலே பரிமாறப்படும் என்று தெரிகிறது. தகவல் பரிமாற்றத்தின்போது  இரகசியத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பு ஆகியன கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும் என்றும் சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது. வரி விஷயங்களில் தானியங்கி தகவல் பரிமாற்றத்திற்கான உலகளாவிய மாநாடு, AEOI அறிமுகப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட செய்தி குறிப்பில் சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் இவ்வாறு கூறியுள்ளது.

உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்

படம்
உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள் 1.கோழிக்கறி தற்போது கடைகளில் கிடைக்கும் கோழி இறைச்சி, ஆன்டிபயாட்டிக் கலக்கப்பட்ட உணவு ஊட்டபடும் கோழிகளால் ஆனது. இதனால் புற்றுநோயும், சாதாரண ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத மிகைப்பூச்சியும் (superbug) உருவாகலாம். 2.பாட்டிலில் அடைக்கப்பட்ட காய்/கனி கலவை டிரஸ்ஸிங் ( salad dressing) கடைகளில் கிடைக்கும் சீசாவில் அடைக்கப்பட்ட காய்/கனி கலவை டிரஸ்ஸிங்கில் ( salad dressing) சீனி கலந்திருக்கும். இதனால் விட்டமின் C குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் எடை அதிகரிப்பு அகியவை ஏற்படலாம்.உணவில் இருந்து கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்களை உடல் ஏற்கும் சக்தியும் குறையலாம். 3 .காப்பியில் கலக்கும் பால்சாரா பாலேடு ( Non Diary Creamer) பால்சாரா பாலேடுகள் ( Non Diary creamer )  ஹைட்றஜனேஷன் செய்யப்பட்ட தாவர எண்ணெய் , மக்காச் சோளச் சாறு, செயற்கை மணமூட்டி ஆகியவற்றால் ஆனது. சீனியும் அதிக அளவில் கலந்துள்ளது. ஹைட்றஜனேஷன் செய்யப்பட்ட எண்ணெய் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படக் காரணமாகும். மேலும் 
படம்
கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி கணினியின் திரையிலிருந்து 20 வினாடி இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள் கருப்புக் கண்ணாடி (sunglasses) அணியுங்கள் வேலைசெய்யும் இடத்திலும் சில விளையாட்டுக்களின் போதும் பாதுகாப்புக் கண்ணாடி அணியுங்கள் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம் காண்டாக்ட் லென்ஸை சுத்தப்படுத்டுங்கள் இதயத்திற்கும் கண்களுக்கும் நலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள் மருந்து லேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள் உங்கள் உடல்நல வரலாற்றைக் கண்டுபிடியுங்கள் பழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள் தவணை மாறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் புகைப்பதை நிறுத்துங்கள்