ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர்

ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத் தீவிரவாதிகள் மேலும் ஒருவரைக் கொன்றனர்



பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வது தவறு என்று பிரதமர் மோடி
கூறிய சில மணி நேரங்களில், ஜார்கண்ட் மானிலத்தில், பசு பாதுகாப்புத்
தீவிரவாதிகள், மாட்டுக்கறி வைத்திருந்தார் என ஒரு முஸ்லிமை கொடுமையாகத்
தாக்கிக் கொன்றுள்ளனர்.



ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில்  42 வயது ஆன அலிமுத்தீன்
இல்யாஸ் அஸ்கர் அலி என்பவர் பசு பாதுகாப்பு தீவிரவாதிகளால் தாக்கப் பட்டு
படுகொலை செய்யப்பட்டுள்ளார்.



மாருதி வேன் ஒன்றில் அஸ்கர் உட்பட மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது அதில் மாட்டுக்கறி கொண்டு செல்வதாக சிலர் வதந்தி பரப்பியதையடுத்து,
 வேனை தாக்கிய பசு பாதுகாப்பு தீவிரவாத கும்பல், வேனை தீயிட்டு
கொளுத்தியது. அதில் அஸ்கர் படுகாயம்டைந்தார்.  அவரை காப்பாற்ற அவருடன்
இருந்த இருவரும் முயன்றபோது  முடியவில்லை.

இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்
ரத்த வெள்ளத்தில் மிதந்த அஸ்கரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்
சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அஸ்கர் பரிதாபமாக பலியானார்.








இதுபோன்ற சம்பவங்களில், பசுப் பாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக்கொண்டு
கொலை செய்பவர்கள், வேறு காரணங்களுக்காக கூலிக்குக் கொலை செய்பவர்களாகவும்
இருக்கக் கூடும். ஆனால், பசு பக்தர்கள் என்று ஒரு கூட்டம் வன்முறையை
நியாயப் படுத்திக் கொண்டிருக்கும் வரை, அதனை சமூக விரோதிகள் தங்களுக்குச்
சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவுகெட்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் எதிர்காலம்?

கடவுளின் கண்

இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களைப் பாதுகாக்க என்ன செய்கிறார்கள் ?