நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்



நீரிழிவு
நோய் நமக்கு இருப்பதாகத் தெரிந்தால், சில வாழ்வுமுறை மாற்றங்களை மேற்கொள்வதுடன்
அவ்வப்போது டாக்டரைக் கலந்தாலோசித்து செயல்பட்டால், இந்நோயைக் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கலாம்.

நீரிழிவு
நோயாளிகள் சாப்பிடும் உணவு அவர்களின் இரத்த சர்க்கரை அளவைப் பாதிப்பதால் இது
மிகவும் முக்கியம்.
கண்டிப்பாக
தவிர்க்க வேண்டிய உணவு என்று எதுவும் இல்லையென்றாலும், உங்கள் உடலின் தேவைக்கு
ஏற்ப சரியான அளவு உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

காய்கறிகள்,
பழங்கள் மற்றும் முழு தானியங்களை உணவில் நிறைய சேருங்கள். கொழுப்பு நீக்கப்பட்ட
பால் மற்றும் மெலிதான இறைச்சிகளைத் தேர்வு செய்யவும்.

உங்கள்
மருத்துவரை வருடத்திற்கு இரு முறையாவது பார்க்கவும்.
நீரிழிவு
நோயாளிகளுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாகையால் கொலஸ்டிரால், இரத்த அழுத்தம்
மற்றும் மூன்று மாதத்தைய சராசரி இரத்த சர்க்கரை (
A1c)
அளவுகளை அறிந்து வைத்திருக்கவும்.
வருடத்திற்கொருமுறை
முழு கண் சோதனை செய்வது அவசியம்.
பாதத்திற்கான
மருத்துவரிடம் சென்று பாதங்களில் புண் அல்லது நரம்புசேதம் போன்றவை இருக்கிறதா
என்றும் சோதனை செய்ய வேண்டும்.
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுளின் கண்

அறிவுகெட்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் எதிர்காலம்?

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல