மானசரோவர் திருப்பயணிகளை அனுமதிப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு தொடர்கிறது : சீனா

மானசரோவர் திருப்பயணிகளை அனுமதிப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு தொடர்கிறது : சீனா



திபெத்திலுள்ள கைலாச மானசரோவர் நோக்கி திருப்பயணம் சென்ற 47 பயணிகளை,
சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் அருகே தடுத்து நிறுத்தியது  குறித்து
இந்தியாவுடன் பேச்சு வார்த்தையில் உள்ளதாக  சீனா தெரிவித்துள்ளது.



சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெங் சூங்ஹாங்
கூறுகையில், “எனக்குக் கிடைத்த தகவலின் படி, இரண்டு அரசாங்கங்களும் இந்த
விடயத்தில் தொடர்பில் இருக்கின்றன”, என்றார். ஆனால், சீன-இந்திய எல்லையில்
பயணிகள் சீன அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட, நிலச்சரிவுகள் மற்றும் மழை
போன்ற வானிலை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இருந்ததா என்பது குறித்து
விளக்க மறுத்து விட்டார்.

இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே
கருத்து தெரிவிக்கையில், ‘‘நாது லா வழியாக இந்திய ஆன்மிக பயணிகள் செல்வதில்
சில சிக்கல்கள் எழுந்துள்ளன. இது பற்றி சீனாவிடம் மத்திய அரசு
எடுத்துச்செல்லும்’’ என்று குறிப்பிட்டார்.







மழையினாலும், நிலச்சரிவுகளாலும் சாலைகள் மிகவும் பழுது அடைந்து
இருப்பதால்தான், இந்திய ஆன்மிக பயணிகளை தடுத்து நிறுத்தி விட்டதாக சீன
அதிகாரிகள் கூறுகின்றனர். வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, சாலை நிலை
மேம்பட்டவுடன் சீனா வழியாக இந்திய ஆன்மிகப் பயணிகள் செல்ல அனுமதி
வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுளின் கண்

அறிவுகெட்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் எதிர்காலம்?

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல