அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி



இன்று (திங்கள்கிழமை) வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.



பிரதமர்  மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கூடிய பேச்சுவார்த்தை மற்றும் பிரதிநிதித்துவ-நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தியபின், “பயங்கரவாதத்தை ஒழிப்பதே இரு நாடுகளுக்கும் அதி முக்கியமான முன்னுரிமையாகும்”, என்றார்.
பின்னர் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதமயமாக்கல் பற்றி நாங்கள் பேசினோம். இவ்விஷயத்தில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் ஒழிப்பு ஆகியவற்றில் எங்கள் ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும்.
இச்சந்திப்பின் முன்பாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதக் குழுவின் தலைவரான சையத் சலாஹூடினை ஒரு உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்க அரசுத்துறை அறிவித்தது. இதன் மூலம், பாக்கிஸ்தானில் இருந்து வெளிவரும் எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் நிலைப்பாட்டை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுளின் கண்

அறிவுகெட்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் எதிர்காலம்?

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல