டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்ததுதிங்களன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர்  டிரம்ப் அறிவித்த, ஆறு
பெரும்பான்மை முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத் தடை
ஏற்படுத்தும் உத்தரவின் முக்கிய பாகங்களை மீண்டும் நிலைநிறுத்தி உள்ளது.
இது குறித்தான முழு வாதங்களையும் இலையுதிர் காலத்திலிருந்து (அக்டோபர்
மாதம்) கேட்கப்படும் என்றும் கூறியது. இது அதிபர் டிரம்பின்
நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப் படுகிறது.முன்னதாக, டிரம்பின் இப்பயணத் தடை உத்தரவுகள் 9 வது சுற்று நீதிமன்றங்களினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தன.

தீர்ப்பில், “ஒரு நற்பெயர் கொண்ட அமெரிக்கருடனோ அல்லது ஒரு அமெரிக்க
 நிறுவனத்துடனோ சம்பத்தப்பட்ட நபர் ஒருவர் அகதி எனும் பெயரில் நாட்டுக்குள்
நுழையும் போது  தடுக்கப்படுவதால் ஏற்படும்  கஷ்டங்களை சட்டபூர்வமாக
 கூறுவதில் பிரச்சனையில்லை.” , என்று கூறப்பட்டிருந்தது.மேலும், “இந்த தனிநபர்களையும், நிறுவனங்களையும் பொறுத்தவரை, நாம் பயண
உத்தரவுகளைத் தடை செய்ய இயலாது. ஆனால் அமெரிக்க நாட்டுடன் எந்தவிதமான
தொடர்பும் இல்லாத அகதிகளுக்கு, நாட்டினரின் பாதுகாப்பினைக் கருத்தில்
கொண்டு, நாம் அரசாங்கத்தின் ஆணையை   ஆதரிக்க வேண்டியிருக்கிறது”, என்றும்
உச்ச நீதிமன்ற குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்

மாட்டுக்கறி கொண்டுசென்றதாக கொல்லப்பட்ட ஜூனைத் கான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை